வாழ்வில் தொடர்ச்சியாக உழைத்துக் களைத்த மக்கள் தமது ஒரு சாண் வயிற்றை வளர்ப்பதற்கான போராட்டத்தில் போற்றுப்போயுள்ளனர். ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி நம்பி ஏமாந்ததுதான் மிச்சம். பெருமூச்சு தொண்டையை அடைக்க பிறக்கப் போகும் புது வருடமாவது நிம்மதியைத் தரட்டும் என்ற நினைப்புடன். புத்தாண்டை வரவேற்பதற்காக புத்தாடை, உணவு வகைகளை வாங்கி கிராம மக்கள் அனைவரும் மட்டுமா நகருக்குள் வருவதை அவதானிக்க முடிந்தது. போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியிலும் இந்த வருடம் நிட்சயம் வாழ்வில் நம்பிக்கையும் , சுபீட்சமும் , ஆராக்கியமும் தரும் ஆண்டை மலரும் என்ற நம்பிக்கைளுடன் ... புத்தாண்டை உலகமே வரவேற்கத் தயாராகிறது.
