——— நமசிவாய வாழ்க ———அகிலத்தில் அனைத்தும் சிவமதாய் உணர
ஒளிவர விளக்கை சீராய் ஏற்றி
ஒப்பிலாமணியை துதித்தே போற்றி
தப்பிலா நாளும் எல்லாம் தம்பிரான் புகழைப்பாடி
நாதனை மனதில் வைத்தேன்
மனமதை கடந்தும் வெல்வேன்
மறைநெறி அம்மையப்பன் சாத்தியமாக்குவானே
மனதினை கடக்கும் மார்க்கம் அத்தனை எளிதே ஆக
மனமது குரங்கினை போலவே தாவும்
இருந்தும் கணமதும் நிறைவினை காணா
கிடைத்தும் தோண்டி குறைதனை காணும்
காரணமின்றி கவலைகள் தேடும்
இழந்ததை எண்ணி கண்ணீர் வடிக்கும்
இகழ்ச்சியை எண்ணி பதுங்கிக்கொள்ளும்
புகழ்ச்சியின் உச்சியில் மகிழ்ச்சியை கொள்ளும்
நூதனமான மனம் அதுதானே
அடுத்தவர் கவிழ்க்க தன்னை உயர்த்தும்
அறனெறி மறந்து பாவங்கள் செய்யும்
ஆணவ வெறியில் சதிபல செய்யும்
நாடகம் நடத்தி சாதனை படைக்கும்
மனமதை விளக்க பக்கங்கள் போதா
மனமதை விலக்கி பக்குவம் காண்பேன்
மாதொருபாகன் காலடிபற்றி மனமதை வெல்வேன்
மனத்தை கடந்து தவத்தில் மிதக்க சிவனடிதானே
சங்கரன் ஜெய சங்கரன்
சிவனடியான்





