
இதேவேளை, இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவ்வனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு, ஹெலிகொப்டர் மூலம் அந்நாட்டு ஜனாதிபதி ஜயர் பொல்சனாரோ, நேற்று நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
புருமாடின்ஹோ நகருக்கு அருகில் இரும்பு மற்றும் தாது சுரங்கங்கள் காணப்படும் பகுதியிலுள்ள இந்த அணை நேற்று முன்தினம் உடைப்பெடுத்தது. சுரங்கத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் மதிய உணவு வேளையில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அகப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
