
கவுசல்யாவை மறுமணம் செய்த இளைஞர் சக்தி, வேறொரு பெண்ணை ஏமாற்றியதாக எழுந்தபுகார் குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் விசாரணை நடத்தி, சக்திக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சங்கர் - பழநி கவுசல்யாஇருவரும் காதலித்து 2015-ல்சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, உடுமலைப்பேட்டையில் சங்கர் கடந்த 2016 மார்ச் 31-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு, தீண்டாமை, ஆணவப் படுகொலைக்கு எதிராக கவுசல்யா போராடி வந்தார்.
இந்த நிலையில், கோவையில் ‘நிமிர்வு கலையகம்’ என்ற பறை இசை பயிற்சி அமைப்பின் பொறுப்பாளர் சக்தி என்பவரை கவுசல்யா காதலித்து கடந்த டிசம்பர் 9-ம் தேதி மறுமணம் செய்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து, வேறொரு பெண்ணை காதலித்து ஏமாற்றியது உட்பட சக்தி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சக்தி மீதான புகார்கள் குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சக்தி மீதான குற்றச்சாட்டுகவுசல்யாவை திருமணம் செய்த பிறகு சக்தி மீது எழுந்த குற்றச்சாட்டுகளும், அவை குறித்து சமூக ஊடகங்களில் வந்த கருத்துகளும் வளர்ந்துகொண்டே சென்றன. இதனால், இப்பிரச்சினையில் தொடர்புடைய அனைவரையும் சென்னையில் உள்ள திராவிடர் விடுதலைக் கழக அலுவலகத்துக்கு கடந்த 27-ம் தேதி வரவழைத்து, காலை 10 முதல் இரவு9 மணி வரை விசாரணை நடத்தினோம்.
காதலித்த பெண்ணை கைவிட்டுவிட்டு கவுசல்யாவை திருமணம் செய்துகொண்டது சக்தி மீதானமுதல் குற்றச்சாட்டு. சங்கரையே நினைத்துக்கொண்டு காலமெல்லாம் கவுசல்யா கைம்பெண்ணாகவே வாழ வேண்டும் என்ற பத்தாம்பசலி நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவர்இன்னொருவரை காதலித்து திருமணம் செய்தது வரவேற்கத்தக்கது. அதேநேரம், சக்தி மீதான காதலால் அவரது செயலை கண்டிக்காதது கவுசல்யா செய்த தவறு.
நிமிர்வு கலையகத்தின் தலைமை ஆசான் என்ற பெயரைப் பயன்படுத்தி, சக்தி தன்னிடம் பயிற்சி பெற வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. ஒரு திருநங்கையும் சக்தி மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதனால் அந்த அமைப்பில் இருந்து சக்தி நீக்கப்பட்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தன் மீதான பாலியல் புகார்களில் இருந்து தப்பிப்பதற்காக, வேறு பெண்களைப் பற்றி சக்தி அவதூறு கூறியதாகவும் புகார் கூறப்பட்டது.
ஒரு பெண்ணை காதலித்துகைவிட்டதை சக்தி ஒப்புக்கொண்டார். ஆனால், மற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டார். கவுசல்யாவும் தனது தவறை புரிந்துகொண்டார். மீண்டும் விமர்சனம் வந்தால்...
எனவே, அவர்கள் இருவரும் பொது அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும். நிமிர்வு கலையகத்தில் இருந்து சக்தி வெளியேற வேண்டும். ரூ.3 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். 6 மாதங்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் அவர் பறை இசைக்கக் கூடாது.
இதன் பிறகும், தேவையற்றவிமர்சனங்களை பொதுவெளியில் வைத்தாலோ, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பினாலோ எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்.
இவ்வாறு அவர்கள் தெரி
வித்துள்ளனர்.
