மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர
முன்னனியின் ஏற்பாட்டில் கண்டன ஆர்பாட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச்
சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் மீது மேற்கொண்ட துப்பாக்கி சுட்டு
சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர
முன்னனியின் உபதலைவர் துரையப்பா
நவரட்ணராஜா தலைமையில் மட்டக்களப்பு காந்தி
பூங்கா முன்பாக கண்டன ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர் ஐக்கிய
சுதந்திர முன்னனியின் கட்சி உறுப்பினர்கள் கருத்து
தெரிவிக்கையில் இந்த சூட்டு சம்பவமானது புனர்வாழ்வு அளிக்கப்பட போராளிகள்
குடும்பங்களின் மத்தியில் பெரும் அச்சத்தை , மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக
தெரிவித்தனர்
புனர்வாழ்வு அளிக்கப்பட போராளிகளின்
குடும்பங்களின் மத்தியில் ஏற்படுத்தியுள்ள
அச்சத்தையும் பயத்தையும் போக்குவதற்கு படுகொலையை
செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து , தண்டனை வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு ,
முன்னாள் போராளிகளை இதில் சம்பந்த படுத்தாமல் போராளிகளின் ,குடும்பங்களின்
மனத வேதனைகளை ஏற்படுத்தாத வகையில் புலனாய்வு துறையினர் செயல் படவேண்டும் என கோரிக்கையின்
விடுத்து இந்த ஆர்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது
இந்த ஆர்பாட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் ,கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்
