தனத் தன தனன
தகு திமி திமின
தனல் நடமாடும்
சிவக்கோலம்
செக செக செகன
உமையவர் பாகர்
உவப்புடன் புகழை
நாள்தோறும்
இனித்திட தமிழில்
ஒலித்திடும் ஒசை
சிவன் புகழ்பாட
அருள்ஈந்து
திருப்புகழ்கு ஈடாய்
சிவப்புகழ் ஒன்ரை
படைத்திட நானும்
அருள்வாயே
வெண்மதி சூடி
உமையவள் கூடி
தாண்டவம் மாடி
பெருமானே
தினம் தினம் நினைத்து
நிதம் உனைப்பாடி
சிவப்புகழ் ஓதி
இருப்பேனே
மீன் கொடித் தேரில்
மன்மத ஏறி
மலர்கனை தொடுத்த
வரலாறு
சினத்துடன் அவனை
சீற்றமாய் நோக்கி
சிதையுற செய்த
சிவனேசா
ரதி அவன் மனைவி
பணிந்துனை வேண்ட
மீளுயிர் ஈந்த
அரனாரே
ஹர ஹர கரனே
சிவ சங்கரனே
எனது முன் நீயே
வரவேண்டும்
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
