(பாண்டி)

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர்,பி.எம்.தீபால் சந்திர ரத்தின தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வாழைச்சேனை பேத்தாழை பொது நூலகத்திற்கும் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலைக்கும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்குட்பட்ட கதிரவெளி பொது நூலகத்திற்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
2017ஆம் வருடத்தில் தேசிய வாசிப்பு மாதத்தில் நடமாடும் வாசிப்புக்களம் அமைத்தல், வாசிப்புத் திறன்சார் போட்டிநிகழ்வுகள், வாசகர்வட்டச் செயற்பாடுகள், வாசிப்போருக்கான ஊக்குவிப்புக்கள், கணிணிமயப்படுத்தப்பட்ட பதிவுகள் மற்றும் வார்கோட் சிஸ்டம் எனப் பலவற்றிலும் சிறப்பாக ஈடுபட்டமைக்காக இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதேச சபைகளின் சார்பில் வாழைச்சேனை தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித், வாகரை தவிசாளர் சி.கோணலிங்கம் பொதுவாக நூலக உத்தியோகத்தர்கள் சார்பில் மரகதம் பிரகாஸ் மற்றும் எம்.சி.செரீப் உசைன் ஆகியோர் பேராசிரியர் பரணவிதானவிடமிருந்து இவ்விருதைப் பெற்றுக்கொண்டனர்.

