சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்
செய்யித் அலி ஸாஹிர் மௌலானவை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகரில் நடைபெற்றது
.
புதிய அமைச்சரவை மாற்றத்தின் பின் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக
ஜனாதிபதி முன்னினையில் செய்யித் அலி ஸாஹிர் மௌலான பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இராஜாங்க அமைச்சராக பதவியினை பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் செய்யித்
அலி ஸாஹிர் மௌலானவை ஏறாவூர் பொதுமக்களினால் வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு ஏறாவூர்
நகரில்
நடைபெற்றது .
ஏறாவூர் நகர் மணிகூண்டு கோபுரம் அருகில் ஒன்றுகூடிய மக்கள் பெரும் ஆரவாரத்துடன் பட்டாசு
கொளுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர்
அமைச்சரை வரவேற்கும் நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் மாகாணசபை உறுப்பினர்கள் ,பிரதேச சபை
உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்
