(எஸ்.எம்.எம்.முர்ஷித் -)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வும் பொதுக் கூட்டமும் நேற்று வெள்ளிக்கிழமை (28.12.2018) மாலை இடம் பெற்றது.

வீதி ஊர்வலம் ரிதிதென்ன இலங்கை போக்குவரத்து சாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்டு ஜயந்தியாய வழியாக ஓட்டமாவடியை வந்தடைந்து ஓட்டமாவடி மீன் சந்தை முன்பாக இருந்து திறந்த வாகன பவனியில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகம் வரை பிரதேச முக்கியஸ்தர்களாள் அழைத்து வரப்பட்டார்.
இதன் போது பிரதேச முக்கியஸ்தர்களாலும் பிரதேச அமைப்புக்களாளும் இராஜாங்க அமைச்சர் கௌரவிக்கப்பட்டதுடன் இராஜாங்க அமைச்சரின் ஆசானும் மூத்த கல்விமானுமாகிய ஏ.எம்.ஏ.காதர் கொளரவிக்கப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதிக்கு விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌசாத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் எஸ்.எம்.எம்.முஸர்ரப், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தின் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
