வடமாகாணத்தின்
முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட
மக்களு;க்கு மட்டக்களப்பு விளையாட்டு கழகங்கள் ,இளைஞர்
அமைப்புக்கள் , ஆலய நிருவாகங்கள் பொதுஅமைப்புக்கள் இணைந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு வெபர்
மைதானத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை இணைந்து
நடாத்தும் நிவாரண சேகரிப்பு பிரதான நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப்பொருட்கள்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு
மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் ஆகியோரிடம் வழங்கிவைத்தனர்.
