LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, December 11, 2018

ஹுவாவி நிர்வாகியின் கணவருக்குச் சொந்தமான வீட்டை உடைக்க முயற்சி!

சீனாவின் ஹூவாவி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிதி தொடர்பான தலைமை நிர்வாகி Meng Wanzhouவின் கணவருக்குச் சொந்தமான வீட்டை உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடாவின் West 28th Avenue என்ற முகவரியிலுள்ள குறித்த வீட்டுக்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இனந்தெரியாத ஒருவர் அத்துமீறி சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்றபோது தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. அத்தோடு, யாரும் கைதுசெய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை Meng Wanzhou கடந்த முதலாம் திகதி மெக்சிக்கோவிற்கு பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை மீறி ஈரானுக்கு தொலைதொடர்பு கருவிகளை வழங்கியதாக Meng Wanzhou மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தற்போது அவர் வான்கூவரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்றில் இது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7