கடந்த கால யுத்தம் காரணமாக நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் அகதிகளாக சென்றவர்களின் அங்கே பிறந்த தமது குழந்தைகளுக்கான இலங்கைக்கான பிறப்புச் சான்றிதலும் பிரஜா உரிமைகளும் பெற்றுக் கொடுக்கும் இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் வேலைத்திட்டத்தில் ஒரு பகுதியினருக்கு நேற்று 08ம் திகதி ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு திருகோணமலையில் இடம் பெற்றது.கடந்த ஜு லை 01ம் கிளிநொச்சியில் இடம் பெற்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நடமாடும் சேவையில் பங்கு பெற்றி தமது தகவல்களை வழங்கியவர்களில் 41 பேருக்கான ஆவனங்கள் வழங்கி வைக்கிப்ட்டது.
இந்நிகழ்வில் இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவி சி.சூரியகுமாரி மற்றும் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் அற்புதன் அன்டன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(அ . அச்சுதன்)








