
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை இன்று நேரில் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிழை அளித்ததுடன் மேகேதாட்டு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியின் சிலை வரும் 16-ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் இன்று சோனியா காந்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று, சிலை திறப்பு விழா அழைப்பிதழினை அவரிடம் அளித்தார். அத்துடன், சோனியா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு, அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்து பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார்.





