
கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் யாழில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த நவம்பர் 7ஆம் திகதி கொண்டுவரப்படவிருந்த அரசியலமைப்பு வரைபைத் தடுப்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவை பிரதமராக நியதித்து குழப்பத்தை ஏற்படுத்தினார்.
நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சி அடைகின்றதாக அல்லது சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைகின்றதாக இருந்தால், அதனால் மிகவும் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள். ஆகையினால், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைவதை ஏற்க முடியாது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களாக சுயநலத்துடன் சிந்தித்திருந்தால் கூட நாங்கள் அதைச் செய்திருக்க வேண்டும்“ என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
