மேற்கத்தேய நாடுகள் மீண்டும் தங்கள் கைவரிசையை காண்பிக்க ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.கண்டியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் ஜனாதிபதியை வைத்திருப்பதா? இல்லையா? அடுத்த பிரதமர் யார் இதுபோன்ற விடயங்களில் தீர்வுகளை ஐரோப்பிய நாடுகளே எடுக்கின்றன.
இந்த மேற்கத்தேய நாடுகளின் உதவியுனே வடக்கு, கிழக்கில் யுத்தம் நிலவியது. இன்று வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் வாயை திறந்தால் இராணுவ முகாம்களை மூடுமாறே கோருகின்றனர்.
ஆனால் மக்கள் இராணுவத்தை நீக்குமாறு கோரவில்லை. இன்று வடக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினரே உதவுகின்றனர்.
இதற்கு இராணுவத்திலுள்ள பெரும்பாலானவர்கள் பௌத்தர்களாக இருப்பதே காரணம். இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்பதே எனது நிலைப்பாடு. ஆகவே எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டை பிரிக்க சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது“ என தெரிவித்துள்ளார்.





