
குறித்த கனடா நாட்டை சேர்ந்த Jahmaul Allen, என்பவர் ரொரன்டோ சர்வதேச விமான நிலையத்தில் தளப் பணியாளராக பணியாற்றி வருகின்றார்.
ஆனால் இவருக்கு ஒரு நடன கலைஞராக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் இவரால் தொழில்முறை நடனக் கலைஞராக பணியாற்ற முடியவில்லை. என்றாலும் தான் புரியும் தள நிர்வாகி பணியின் போது நடனமாடி, விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை மகிழ்வித்து வருகின்றார்.
சமீபத்தில், Jahmaul Allen, விமான நிலையத்தில் நடனமாடும் காணொளி ஒன்று விமானத்தில் பயணித்த பயணி ஒருவரால் எடுக்கப்பட்டது. தற்போது, குறித்த காணொளியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
