
எலும்புக்கூடுகள், மூளை, முதுகெலும்பு ஆகியன இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு உண்மையான சில மனித உறுப்புக்கள் இங்கு இரசாயன திரவம் கலந்த போத்தல்களில் அடைக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பழமையான மாதிரிகள் 1820ஆம் ஆண்டுகளில் இருந்து உள்ளன.
திகில் நிறைந்த குறித்த அருங்காட்சியகம், நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் பயன்படுத்தப்பட்டது. இந்த அருங்காட்சியகம் தற்போது, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு பொது மக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 1 மணி முதல் 4 மணிவரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
