
மெகபூபா முப்தி வேதனையுடன் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில், பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், தீவிரவாதிகள் கட்டுப்படுத்தும் நடவடிக்கை, மாநில அரசு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடுவதாலும், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதாகவும் குற்றம்சாட்டி, கடந்த ஜூன் மாதம் பாஜக ஆதரவை வாபஸ் பெற்றதால் பிடிபி கூட்டணி அரசு கவிழ்ந்தது.
ஜம்மு காஷ்மீரில் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தால், பிரதமர் மோடி பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சில் ஈடுபடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், உண்மையில், பாஜகவுடன் கூட்டணி சேர்வது என்பது தற்கொலைக்கு சமம் என்று தெரிந்தே அந்த நடவடிக்கையில் இறங்கினேன்.
எங்களின் கட்சி பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை ஊக்குவித்து வரும் நிலையில், மோடியுடன் அமைக்கும் கூட்டணி பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். மேலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஆட்சியில் இல்லாத பெரும்பான்மை பலம் மோடிக்கு இருப்பதால், பாகிஸ்தான் மக்களுடனும், ஜம்மு காஷ்மீர் மக்களுடனும் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்தோம்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, என்னுடைய தந்தை ஜம்மு காஷ்மீரில் முதல்வராக இருந்த 2002- முதல் 2005-ம் ஆண்டுவரையிலான காலம் என்பது வரலாற்றில் பொற்காலமாகும். இருவரும் கருத்தொற்றுமையுடன் செயல்பட்டனர்.
காஷ்மீர் மாநிலத்துக்குப் பிரதமர் மோடியை அழைத்திருந்தபோது, நாங்கள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களைத் திரட்ட இருந்தோம், ஆனால், மோடி வரவில்லை.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இருந்த மனநிலை பிரதமர் மோடிக்கும் இருக்கும், ஜம்மு காஷ்மீர் மக்களின் குறைகளை, நீண்டகால பிரச்சினைகளை மோடி தீர்த்துவைப்பார் என்று நம்பினேன். ஆனால், எதையும் மனதில் கொள்ளாமல், பிடிபி கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொண்டனர். எதற்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்தோமோ அது ஏமாற்றமளித்தது, மக்களையும் ஏமாற்றியது.
நாங்கள் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியுடன், தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி அமைக்க எண்ணியதில்லை. ஆனால், இப்போது காலத்தின் தேவைக் கருதித்தான் அந்த முடிவை எடுத்தோம்.
இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்தார்.
