
இப் பயிற்சி பட்டறைக்கு திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளது சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் என். ரவிச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
கிராமங்களில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பதை ஒழிக்க பல நடவடிக்கைகளை எவ்வாறு சமூகத்துக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பலவாறான விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
சமூக மட்டங்களில் உள்ள அமைப்பினால் எவ்வாறான நடவடிக்கைகளை இதற்காக மேற்கொள்ள முடியும். ஆண் பெண் சமத்துவம் முறைகள் கையாளும் அணுகு முறைகள் தொடர்பிலான விளக்கங்களும் இதன் போது உள்வாங்கப்பட்டன.
அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய தலைமையகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சாக்ய நாணாயக்கார அவர்கள் இப் பயிற்சியினை நெறிப்படுத்தி வளவாளராக கலந்து கொண்டார்.
இப் பயிற்சிப் பட்டறையில்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 20க்கு மேற்பட்ட சிவில் சமூக சேவை அமைப்புக்களை சேர்ந்த 50 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
(அ . அச்சுதன்)
