
ஒடிசா மாநில கடலோர மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானியான ஏ.பி.ஜே அப்துல் கலாம் தீவிலிருந்தே, ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், அங்குள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் 4ஆவது தளத்திலிருந்து இன்று காலைவேளையில் அக்னி-ஐ.ஏ ஏவுகணை விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.
அக்னி-ஐ.ஏ ஏவுகணை கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து, அணுஆயுதங்களையும் சுமந்து சென்று, எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை வாய்ந்ததென தெரிவிக்கப்பட்டுள்ளது.
