
ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,
“ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் மிகப்பெரிய ஊழல்வாதி. நிதி அமைச்சகத்திலிருந்து அவரை பதவி நீக்கம் செய்ய வைத்தேன். அப்படிப்பட்டவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கு பெங்களூர் ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன்தான் தகுதியானவர். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்.
பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை எதுவும் வீசவில்லை. ஏதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.கவே வெற்றிபெறும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ளார். அவரால் நமது நாட்டின் பிரதமராக முடியாது. ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்துசெய்ய வேண்டும். அப்படி செய்தால் அவரால் சட்டமன்ற உறுப்பினராகக்கூட முடியாது.
தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டுமென்றும் விரும்புகின்றனர். அயோத்தியில் நிச்சயம் ராமர் கோயில் கட்டுவோம். ராமர் கோயில் தொடர்பாக இந்து தர்ம ஆச்சார்ய சபையிலும் நான் அனுமதியளித்துள்ளேன்” என அவர் கூறினார்.
