நேற்று (13) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பிரதிபலனாகவும், தற்போதைய அரசியல் நிலைமையின் காரணமாகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவலால் தெரிவிக்கின்றன.
உயர் நீதிமன்றின் தீர்ப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரே தெரிவு ரணில் விக்ரமசிங்கவாக இருந்தால் தான் விரும்பாவிட்டாலும் அதற்கு இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இதற்கமைய இன்றைய தினம் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களிலிந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளைத் தீர்ப்பு ஏதுவாகவிருந்தாலும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. (ந)
