
பிரதமரின் முன்மொழிவுகள் தெளிவற்றவையாக காணப்படுவதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன்-க்ளூட் ஜுங்கர் தெரிவித்ததையடுத்து அவருடன் பிரதமர் தெரசா மே வலுவான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பான மேலதிக உறுதிகள் தொடர்பாக ஐரோப்பிய தலைவர்களிடம் மிகவும் தெளிவாக தாம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் மேலதிக விவாதங்களுக்கும் தெளிவுபடுத்தல்களுக்கும் இடமிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இன்று காலையும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் ரஸ்க் ஆகியோருடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
