”அமெரிக்க படைகள் தொடர்ந்து அவமானங்களை சந்தித்து வருகிறது. அதன் மூலம் நல்ல பாடம் கற்றிருக்கும். 1980–களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட நிலைதான் அமெரிக்க படைகளுக்கும் ஏற்படும்.
எனவே தலிபான்களை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுங்கள்” என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்ளூர் படையுடன் இணைந்து அமெரிக்க இராணுவமும் தாக்குதல் நடத்திவருகிறது.
ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தலிபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே தலிபான்களின் பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவிற்கு தலிபான் பயங்கரவாத இயக்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
