
ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 4.30 அளவில் Parkdale பகுதியில் வைத்து துப்பாக்கி முறையில் அந்த நபர் பணத்தை அபகரித்துச் சென்றதாக தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அந்த வாடகை வாகன சாரதி, ரொறன்ரோவின் மேற்கு பகுதியில் வைத்து இரண்டு பயணிகளை ஏற்றியதாகவும், அதன் பின்னர் அவர்களை King Street மற்றும் Dowling Avenue நோக்கி அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அந்த இடத்தினைச் சென்றடைந்த நிலையில், பயணிகளில் ஒருவர் சாரதியிடம் துப்பாக்கியைக் காடடி மிரட்டிய நிலையில், மற்றையவர் சாரதியிடமிருந்த பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை அபகரித்துக் கொண்டு வாகனத்தில் இருந்து இறங்கித் தப்பித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் சுமார் 21 இலிருந்து 23 வயதுடைய சந்தேக நபர்களைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
