
அமெரிக்காவின் 41ஆவது ஜனாதிபதியாக 1989முதல் 1993ஆம் ஆண்டுவரை பதவிவகித்த ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ், தனது 94ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்றுமுதல் அவரது பூதவுடலுக்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வந்ததோடு, தலைநகர் வொஷிங்டனில் நேற்று அரச இறுதிஅஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதனை முன்னிட்டு நாடெங்கும் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டதோடு, அரச விடுமுறையும் வழங்கப்பட்டது.
அரச இறுதி அஞ்சலி நிகழ்வில், பிரித்தானிய இளவரசர் சார்லஸ், பிரித்தானிய முன்னாள் பிரதமர் ஜோன் மேஜர், ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல், ஜோர்டன் மன்னர் அப்துல்லா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதிகளான பாரக் ஒபாமா, பில் கிளிண்டன் உள்ளிட்ட அனைவரும் மனைவியருடன் ஒரே வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் அனைவரையும் ஜோர்ஜ் புஷ் வரவேற்றார்.
முன்னதாக மனைவி மெலனியா ட்ரம்புடன் வந்த டொனால்ட் ரம்ப், ஒபாமாவுக்கும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவுக்கும் கைகொடுத்தார்.
ஆனால் பில் கிளிண்டனையும் அவரது மனைவியும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டனையும் பொருட்படுத்தவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன
