
சபாஹர் துறைமுக நகரில்உள்ள பொலிஸ் தலைமையகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்த நபர் திடீரென காரை வெடிக்க வைத்துள்ளார்.
இந்த தாக்குதலில் 3 பொலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்தோடு 20 க்கும் அதிகமானோர் படுகாயமுற்றனர்.
பொலிஸ் உயர் அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டிருப்பதாக ஈரான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
