LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 12, 2018

நண்பர்களாக மாறிய ஜனாதிபதி - சபாநாயகர்! ரணிலுக்கு அடித்த அதிஷ்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில், கடந்த தினங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக தெரியவருகிறது.

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தொடர்ந்தும் நிராகரித்து வருவதால், சபாநாயகர் இந்த பேச்சுவார்த்தையில் தலையிட நேரிட்டது. இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையிலான பழைய நட்பு வலுவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

கரு ஜயசூரியவின் குணம், அவர் நடந்துக்கொள்ளும் விதம் தொடர்பில், ஜனாதிபதி தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான குழப்ப நிலையில், மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளமை, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்தும் நீடிக்க இடமளிக்க முடியாது என்பதால், தற்போது ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியது அவசியம் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இதனடிப்படையில், பெரும்பான்மை பலம் இருப்பதால், ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் அதற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை. கரு ஜயசூரிய காரணமாகவே ஜனாதிபதி இதற்கு இணங்கியுள்ளதாக பேசப்படுகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றத்தை பாதுகாத்தது போல், ஜனாதிபதியையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனநாயக நாடு என்ற வகையில் உலகத்திற்கு முன்னுதாரணமாக ஆட்சி நடத்தப்பட்டது எனவும் இதனை தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பாதிக்க இடமளிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்(ந).

கிண்ணியாச் செய்தியாளர்




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7