ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட தம்புளை பிரதேச சபைக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இணைந்தே இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளன. இச்சபையிலுள்ள 25 பேர் இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இந்த பிரதேச சபையிலுள்ள மொத்தம் 26 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவர் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் இருக்க வில்லையென கூறப்படுகின்றது. (ந)
(ஏ.நஸ்புள்ளாஹ்)





