
கனடாவிலுள்ள சீன தூதரகம் ஊடகமொன்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹூவாவி தலைமை நிதி அதிகாரியின் கைது சாதாரண நீதி வழக்கு அல்ல என்றும், இதுவொரு திட்டமிட்ட அரசியல் சதி எனவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், இது சீன நிறுவனத்திற்கும், குடிமக்களுக்கும் எதிரான அரசியல் துன்புறுத்தல் என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.
சீன மக்கள், கனடா மீது சிறந்த அபிப்பிராயத்தை கொண்டிருந்ததாகவும், ஆனால், கனடாவின் இந்த செயற்பாடு சீன குடிமக்களின் உணர்வை சலிப்படையச் செய்துள்ளதாகவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
