LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 26, 2018

திருகோணமலை இந்துக்கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடந்த மாபெரும் மனித உரிமைகள் ஆய்வரங்கில்


'பல்கலைக்கழக மாணவர் பேரவையிலே பால் நிலை சமத்தவத்தை உறுதிப்படுத்தும் வகையில்; வகையில் பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும் என அம்பாறை மாவட்ட மனித உரிமைக்கள் ஆணைக்குளுவின் உதவி ஆணையாளர் ஏ.எல்;.இசடீன் தெரிவித்தார்.

திருகோணமலை இந்துக்கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடந்த மாபெரும் மனித உரிமைகள் ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்படி விடயத்தை வலியுறுத்தினார்

 அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்

,பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் பேரவைகளில்  அதிகளவிலானமாணவர்கள் பெண்களாக இருக்கின்றனர். அங்கு குறிப்பாக 80வீதமான பெண் மாணவர்கள் உள்ளபோதிலும் மாணவர்கள் பேரவை போன்ற அமைப்புக்களில் 20 வீதமான பிரதிநிதித்தவத்தைக்கொண்ட ஆண்களே முக்கியமான பதவிகளில் இருப்பதுடன் பெண்களின் பிரதிநிதித்துவம் அங்கு குறைவாகவே காணப்படுகின்றது.

இங்கு பெண்களின்பிரதிநிதித்தவம் அதிகரிக்கப்படவேண்டும் பால்நிலை சமத்துவத்தை சமூகத்தில் உறுதிப்படுத்தும் வகையில் முன்மாதிரியாக  பல்கலைக்கழக மாணவர்கள் பேரவையில்  பெண்களின் பங்களிப்பபை அதிகரிக்க வேண்டும்



இவ்வாறான பேரவைகளில் தலைவராகவும் ஒரு ஆண்மாணவர்தான் இருப்பார், உபதலைவராகவும் ஒரு ஆண்மாணவர்தான் இருப்பார் இவ்வாறான கட்டைப்பிலேயே பிரதிநிதித்துவம் இருப்பதனைக்காண முடிகின்றது.



ஆனால் 80 வீதமான பெண்கள் இருக்கும் இ;வாறான அமைப்புக்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. இதனால் தான் பெண்களுக்கான உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் வகையில்  ஆரம்ப அடிப்படையாக பெண்களின் பிரதிநிதித்துவ மாற்றம்  முன்மாதிரியாக இங்கு கொண்டுவரப்படவேண்டும்

எனவும் வலியுறுத்தினார்.

இங்கு  கிழக்கு  பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வழாகத்தின் தொடர்பாடல் துறை விரிவுரையாளர் திருமதி சிவப்பிரியா ஸ்ரீராம் பிரதிக்கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன்,கிழக்குமாகாணசபையின்  சட்ட அதிகாரி உள்ளிட்ட பலரும் கருத்தாடலில் கருத்தக்களை முன்வைத்தனர்



கிழக்கு மாகாணத்தைச்சார்ந்த 300 அதிகமான சிவில் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வை இளைஞர் அபிவிருத்தி அகம் ஏற்பாடு செய்திருந்தது. 'வி எபெகற'; அமைப்பு அனுசரணை வழங்கியிருந்தது கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்கள ப்பணிப்பாளர் க.மதிவண்ணன்,கிழக்கு மாகாண  சிறுவர்நன்னடத்தை திணைக்கள உதவி ஆணையாளர் திருகோணமலை மாவட்ட மனித உரிமைகள் ஆணையகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் திரளானோர்கலந்துகொண்டனர்.

இங்கு மனித உரிமைகள் தொடர்பான கவியரங்கு, கவிஞர் தி.பவித்திரன் தலமையில் நடைபெற்றது.ஆய்வரங்கு ஊடகவியலாளர் வ.இராஜ்குமார் தலமையில் இடம்பெற்றது.,கருத்தரங்கு அம்பாறை மாவட்ட மனித உரிமைகள் ஆணையாளர் இசைட்டீன் தலமையில் நடைபெற்றமை  குறிப்பிடத்தக்கது.

அ. அச்சுதன்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7