இச்சம்பவத்தில் 113 போத்தல் மதுபானம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எஸ். கரிநாத் தலைமையில் பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று (சனிக்கிழமை) இரவு புன்னச்சோலை பிரதேசத்தில் குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
மதுபான விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரைக் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 47 போத்தல் மதுபானத்தை மீட்டதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
