
மருதானை ரயில் நிலையத்தில் வைத்து 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 6 மில்லியன் ரூபா பெறுமதியான 512 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
மருதானைப் பொலிஸாரிற்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக மருதானைப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென மருதானைப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
