
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரணைமடு குளத்தின் வான் கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரான காலப்பகுதிகளில் குறித்த குளம் மீள் கட்டுமாணத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
மேலும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரணைமடுவிற்கு வந்திறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ந)
ஏ.நஸ்புள்ளாஹ்
