நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நான்காவது நாளாகவும் விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து இடைக்கால தடையை எதிர்வரும் 10ம் திகதி வரை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நேற்று மேலும் ஒரு நாளினால் தடை உத்தரவு நீடிக்கப்பட்டது.
இந்நிலையில் மேலும் இரு தினங்கள் தடை உத்தரவை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ள தீர்ப்பு, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ந)
கிண்ணியாச் செய்தியாளர்
