LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, December 28, 2018

பிரபல நடிகர் சீனு மோகன் காலமானார்

பிரபல நாடகக் கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) இன்று (புதன்கிழமை) காலை மாரடைப்பால் காலமானார்.

கிரேஸி மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீனு மோகன் என்று அழைக்கப்பட்ட இவர் சுமார் 3000 க்கும் மேற்பட்ட மேடை நாடங்களில் நடித்துள்ளார்.

1989 இல் ‘வருஷம் 16’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கிய ‘அஞ்சலி’, ‘தளபதி’ படங்களில் நடித்தார்.

மேலும், ‘தலைவாசல்’, ‘இறைவி’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘ஸ்கெட்ச்’, ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் ‘செக்கச்சிவந்த வானம்’ வெளியானது.

கிரேசி மோகனின் முக்கிய நாடகங்களான ‘மர்மதேச ரகசியம்’, ‘மாது ப்ளஸ் டூ’, ‘மதில்மேல் மாது’, ‘மேரேஜ் மேட் இன் சலூன்’, ‘ரிடர்ன் ஒஃப் கிரேசி தீவ்ஸ்’ ஆகிய நாடகங்களில் பிரதான பாத்திரங்களில் சீனு நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7