
கனடாவில் தொழில்வாய்ப்பு பெறுவதற்கு இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்பொருட்டு கனடா தூதரகத்தின் ஊடாக விண்ணப்பங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வி மற்றும் தொழில்வாய்ப்புக்காக 3 சதவிதமான தேர்வுகள் நடத்தப்பட்ட பின்னரே அங்கு குடியுரிமைக்கான அனுமதி வழங்கப்படுகின்றது. இதில் தனியார் நிறுவனங்கள் மூலம் விண்ணப்பித்து தேர்வுப் பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் இதற்காக விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதன்மூலம், முதலில் நிரந்தர குடியுரிமை (பி.ஆர்) வழங்கப்படுகிறது.. கடந்த ஒக்டோபர் மாத இறுதியளவில் 15 ஆயிரம் இந்தியர்களுக்கு கனடாவில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த 2017ஆம் ஆண்டை விட 50 சதவீதம் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடா நாட்டு குடியுரிமை பெறுவதில் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களே முதலிடத்தில் உள்ளனர். அதற்கடுத்தபடியாக இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்தவருடத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 15,600 பேருக்கு கனடா குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
