LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, December 11, 2018

சர்வமதத் தலைவர்களின் சமய,நல்லிணக்கப் பயணம்

திருகோணமலை மாவட்ட எகட் ஹரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று (11) செவ்வாய்க் கிழமை திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள் காலி மாவட்டத்துக்கு சென்று சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மதஸ் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இதன் போது பார்வையிட்டுள்ளனர்.

சமாதானம், நல்லிணக்கம், புரிந்துனர்வு, பரஸ்பரம் உள்ளிட்ட விடயங்களை மூவின சமூகத்துக்கும் இடையில் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு பயணமாகவும் இது கருதப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. பௌத்தம், இந்து, இஸ்லாம் , கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் காலி மாவட்டத்தில் உள்ள கதிரேசன் கோயில், காலி கோட்டை, ஜப்பான் நாட்டின் உதவியில் நிர்மாணிக்கப்பட்ட சமாதான இணக்க பாகொட பௌத்த விகாரை, முஸ்லீம் பள்ளிவாயல் காலி சர்வதேச கிரிக்கட் விளையாட்டு மைதானம் போன்ற இடங்களில் தரிசித்து ஒன்று கூடல் ஒன்றையும் மத கலாசார விழுமியங்களையும் இதன் போது மூவினங்டளை சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள் கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பும் கிட்டியமை குறிப்பிடத்தக்கது.

தேசியம் தொடக்கம் சர்வதேசத்துக்கு ஒரு முன்னுதாரணமாக சர்வமதத் தலைவர்களின் சமய.நல்லிணக்கப் பயணம் எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.
இதில் திருகோணமலை மாவட்ட எகட் ஹரித்தாஸ் நிறுவன திட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.றிஸ்மி, காலி மாவட்ட ஹரித்தாஸ் நிறுவன முகாமையாளர் எம்.என்.ஈ.ஒஸ்டின் பெரேரா உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.
(அ . அச்சுதன்)



















 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7