கிழக்கு மாகாண விளையாட்டுத் துறை திணைக்களத்தின் மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் நடைபெறவுள்ள இவ் நிகழ்வில் கிழக்கில் விளையாட்டு துறைகளில் தேசிய சர்வதேச மட்டத்தில் சாதனை படைத்த வீர வீராங்கனைகள் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.
இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம ஆளுனரின் பாரியார் திருமதி.தீப்தி போகொல்லாகம உட்பட பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.சரத்அபயகுணவர்தன மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட செயலக அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அ . அச்சுதன்
