
இந்த உடன்பாடு குடியேற்ற அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தில் வலதுசாரிக் கட்சிகளால் நடத்தப்பட்ட இப்போராட்டங்கள் முக்கிய ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்திற்கு வெளியே முன்னெடுக்கப்பட்டன.
சுமார் 5500 எதிர்ப்பாளர்கள் கலந்துகொண்ட இப்போராட்டங்களின்போது மோதல்கள் வெடித்ததால் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தின் மூலம் கலவரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
நகர மையத்தில் இடதுசாரி குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட குடியேற்றத்துக்கு ஆதரவான எதிர்ப்பு போராட்டத்தில் சுமார் 1000 மக்கள் கலந்துகொண்டனர்.
பெல்ஜிய ஆளும் கூட்டணியின் மிகப்பெரும் உறுப்பினர் வலதுசாரி N-VA கட்சி, கடந்த ஞாயிறன்று உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கான பிரதமரின் முடிவை எதிர்த்து அரசாங்கத்தை விட்டு வெளியேறியது.
