பாண்டிருப்புக் கிராமத்தின் சார்பில் ஜக்கியதேசியக் கட்சியின் பெண் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட விநாயகமூர்த்தி புவனேஸ்வரி முதல்வர் றக்கீப் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் ஆகியோரூடாக விடுத்த வேண்டுகோளுக்கமைய நகர திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப்ஹக்கீம் ஊடாக இந் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநகரசபை உறுப்பினர் விநாயகமூர்த்தி புவனேஸ்வரியின் தலைமையில் கடற்கரைவீதிக்கான அடிக்கல் நாட்டு விழா வெகுவிமர்சையாக பாண்டிருப்பில் நடைபெற்றது.
ஜக்கியதேசியக் கட்சியின் பெண்வேட்பாளரான திருமதி விநாயகமூர்த்தி புவனேஸ்வரி ஏற்கனவே பாண்டிருப்பில் 60 இலட்சம் ரூபா செலவில் ஆறு வீதிகளை புனரமைப்புச் செய்துள்ளார். அத்துடன் மின்விளக்குகள் பலவற்றையும் பொருத்திவருகின்றார். இவரது கணவர் ஜக்கியதேசியக் கட்சியின் பாண்டிருப்பு இணைப்பாளர் விநாயகமூர்த்தியினால் பாண்டிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்துவரும் மேட்டுவட்டை வீட்டுத் திட்டத்தில் ஒரு கோடிரூபா செலவில் காபட் வீதி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்னமலை நிருபர்
