
ஸ்கார்பரோவில் லோரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் மார்க்சைட் அவென்யூவின் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதியாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அவர் காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து 3 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ரவ்ச்சன் வீதி மற்றும் கில்ட்வுட் பார்க்வே பகுதியில் 10:30 மணியளவில் அவர் தென்பட்டுள்ளார்.
இதன் பின்னர் ரொறன்ரோ பொலிஸார் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குறித்த பெண் முதியவர் வெள்ளை நிறம், 5’3 உயரம், சாம்பல் முடி மற்றும் 145 பவுண்ட் எடை கொண்டவர் என்றும் கருப்பு ஜக்கெட், நீல ஜீன்ஸ் மற்றும் சாம்பல் “Sketchers” காலணிகள் அணிந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு அவரது புகைப்படத்தையும் வெளியிட்ட பொலிஸார் அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
