விஷால் தலைமையில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டம் அண்ணாசாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
இதில் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் இந்த செயற்குழுவில் முக்கிய விவாதங்களும் இடம்பெற்றன.
இதன்போது தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் கௌதம் மேனனுக்கு பதிலாக, பார்த்திபன் துணைத்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது கருத்து வெளியிட்ட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்,“ அடுத்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழு திகதி குறித்து முடிவெடுக்கப்படும் அத்தோடு, இளையராஜா நிகழ்ச்சி தொடர்பாக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம்.“ என்றும் தெரிவித்தார்
