LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 19, 2018

சென்.மைக்கேல் தனியார் பாடசாலையின் 7 ஆவது மாணவனும் கைது

கனடாவின் சென்.மைக்கேல் தனியார் பாடசாலையில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அக் கல்லூரியின் கல்விகற்றுவரும் 7 ஆவது மாணவர் கைது செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்.மைக்கேல் தனியார் பாடசாலையில் தாக்குதல் மற்றும் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் 7 ஆவது மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு முதலில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

குறித்த பாடசாலை மாணவர் குழுவொன்று சக மாணவர்களை பாலியல் ரீதியாகவும் வேறு வகையிலும் துன்புறுத்தி, அதனை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7