
கனேடிய வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி கனடா நெஷனல் போஸ்ட் பத்திரிகை இன்று (புதன்கிழமை) இத்தகவலை வெளியிட்டுள்ளது.
தடுத்துவைக்கப்பட்டுள்ள கனேடிய பிரஜை தொடர்பான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. அத்தோடு, அவர் ராஜதந்திரியல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த செய்தி தொடர்பாக தாம் அறிந்திருக்கவில்லையென சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஹூவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தலைமை நிர்வாகி மெங் வான்சூ கனடாவில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கனேடிய முன்னாள் ராஜதந்திரி ஒருவரும் வர்த்தகர் ஒருவரும் சீனாவில் கடந்த 10ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
மெங் வான்சூவின் கைதுக்கு பழிவாங்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக கனடா குறிப்பிட்டுள்ள போதிலும், சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டதால் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக சீனா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
