
குயிலின் பாரத்தைக் காகம்
சுமக்க வேண்டியதாகிறது
கூடுகட்டத் தெரியாத
குயிலுக்கு எதற்கு முட்டை?
சந்தர்ப்பம்தேடி பாடுவதைக் கேட்கிறோம்
இல்லையா?
ஆண் குயில் ஒரு சுயநலவாதி
அது கடுப்பைக் கழற்ற அலைகிறது
கடவுள் கொடுத்த வரம் அல்லவா.
கூவும் ஞானம் இனிய ஓசைக்குள்
காகமும் நனைந்திருக்கிறதோ.
இனம் புரியா காகம்
காக்கைக்கு வந்தகதி.
தந்திரத்தை பயன்படுத்த அறியாமல் தவிக்கிறது காகம்
எனது சூழலை சுத்தம் செய்கிறதே
மாமாவின் வரவைச் சொல்கிறதே
அதிகாலை எழுப்புகிறதே
குரல் இனிமை தருகிறதே
குயிலுக்கு நல்ல குரல்தான்.
கூடு கட்டும் நுட்பத்தை இழந்த குயில்.
விடு ஒளித்து மறைந்து உனது முட்டைகளை
எனது கூட்டுக்குள்
நான் வளர்த்து விடுகிறேன்
உணவூட்டி மகிழ்கிறேன்
குரல் மொழி அறியும்வரை
உனது குஞ்சுகளை
காகம் ஓர் அப்பாவிப் பறவை.
டீன் கபூர்
