LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, December 20, 2018

இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 29 புதிய அமைச்சர்கள்

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் 29 அமைச்சர்கள் இன்று முற்பகல் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு-

இதற்கமைய புதிய அமைச்சர்களின் விபரங்கள் வருமாறு-

1.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார,  புனர்வாழ்வு, புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார  அமைச்சர்.

2.மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்.

3.திலக் மாரப்பன – வெளிவிவகார அமைச்சர்

4.ஹரின்  பெர்னான்டோ – தொலைத்தொடர்புகள்,டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டுத்துறை அமைச்சர்.

5.ராஜித சேனாரத்ன – சுகாதார, ஊட்டச்சத்து, மற்றும் சுதேச அபிவிருத்தி அமைச்சர்.

6. ரவி கருணாநாயக்க – சக்தி, மின்சக்தி மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சர்.

7.ஜோன் அமரதுங்க – சுற்றுலா அபிவிருத்தி, வனவாழ் உயிரினங்கள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர்.

8.காமினி ஜெயவிக்ரம பெரேரா – புத்தசாசன, வயம்ப அபிவிருத்தி அமைச்சர்.

9.லக்ஸ்மன் கிரியெல்ல – அரச நிறுவனங்கள், கண்டிய பாரம்பரிய, கண்டி அபிவிருத்தி   அமைச்சர்

10.ரவூப் ஹக்கீம் – நகர திட்டமிடல், நீர் விநியோக,  உயர் கல்வி அமைச்சர்

11.வஜிர அபேவர்த்தன – உள்நாட்டு விவகார மற்றும்  மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர்.

12.றிசாத் பதியுதீன்  – கைத்தொழில் மற்றும் வணிக, மீள் குடியேற்ற மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி.

13.சம்பிக்க ரணவக்க – பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்.

14.நவீன் திசநாயக்க – பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர்.

15.பி.ஹரிசன் – விவசாய, கிராமிய பொருளாதார விவகார, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் கடல்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்.

16.கபீர் ஹாசிம் – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்

17.ரஞ்சித் மத்தும பண்டார – பொது நிர்வாக, மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்.

18.கயந்த கருணாதிலக – காணி, நாடாளுமன்ற மறுசீரைமைப்பு அமைச்சர்.

19.சஜித் பிரேமதாச – வீடமைப்பு, கலாசார அமைச்சர்.

20.அர்ஜூன ரணதுங்க – போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்.

21.பழனி திகாம்பரம் – மலையக புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி  அமைச்சர்

22.சந்திராணி பண்டார – மகளிர் மற்றும் சிறுவர்கள் மேம்பாடு மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி அமைச்சர்

23.தலதா அத்துகோரள – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

24.அகில விராஜ் காரியவசம் – கல்வி அமைச்சர்

25.சாகல ரத்நாயக்க – துறைமுக, கடல் நடவடிக்கை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைச்சர்

26.மனோ கணேசன் – தேசிய ஒருமைப்பாட்டு, அரச மொழிகள், சமூக முன்னேற்ற, இந்து மத விவகார அமைச்சர்.

27.தயா கமகே – தொழிலாளர், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர்

28.மலிக் சமரவிக்ரம -அபிவிருத்தி மூலோபாய, அனைத்துலக வணிக, விஞ்ஞான, மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்.

29. அப்துல் ஹலீம் மொஹமட் ஹாசீம்- அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர்.ந)


ஏ.நஸ்புள்ளாஹ்





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7