மண்ணும் நீயே விண்ணும் நீயே விளங்கும் உலகின் முழுப்பொருள் நீயே
கண்ணும் நீயே கருவும் நீயே துலங்கும் கருத்தின் உள்பொருள் நீயே
பண்ணும் நீயே பதமும் நீயே பாடலில் ஒலிக்கும் ஓசையும் நீயே
நேற்றும் நீயே இன்றும் நீயே
நாளை என்ற காலமும் நீயே
நேரமும் நீயே நிமிடமும் நீயே ஓடிடும் நொடியதும் யாவையும் நீயே
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான் 🙏
