
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் சனிக் கிழமை (17) கிண்ணியாவில் இயங்கி வரும் serving Humanity Foundation னால் சோலைவெட்டுவான் கிராம சேவகர் உத்தியோகத்தரின் காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.
அண்மையில் பெய்த அடை மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இவ் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.றியாத் serving Humanity Foundation இன் தலைவர் எம்.டீ.ஜரூக்,மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிறுவன ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(அச்சுதன்)
