சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர், டெய்லர் தொழில் செய்யும் ரவி. இவரின் மனைவி சம்பவ தினத்தன்று மகனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த ரவி, அவரின் எதிர் வீட்டில் இருந்த 11 வயது சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதைக் கண்ட அங்கிருந்த இளைஞர் உடனடியாக அந்த சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு, அந்த நபரின் வீட்டிற்கு இளைஞர் சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் உள்ளே அலறல் சத்தம் கேட்ட உடனடியாக கதவை திறக்கும் படி அந்த நபர் சத்தமிட, கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால், ஆத்திரமடைந்த அங்கிருந்த மக்கள் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, அந்த நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுமியை மீட்ட மக்கள், அதன் பின் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், ரவியை பிடித்து விசாரித்துள்ளனர்.
அதன் பின் அவரது செல்போனை ஆராய்ந்து பார்த்த போது, ஆபாச வீடியோக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்த ஆபாச வீடியோக்களை காண்பித்து தான், அந்த நபர் சிறுமியிடம் மிகவும் மோசமாக நடந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது
அதன் பின் சிறுமியிடம் விசாரித்த போது அவர் கூறியது, சிறுமியின் அப்பா இறந்துவிட்டார். அவரின் அம்மா, வீட்டு வேலை செய்து சிறுமியைப் படிக்கவைத்து வருகிறார். பாட்டியின் வீட்டில்தான் சிறுமி, அவரின் அம்மா ஆகியோர் வசித்து வருகின்றனர்.
ரவியின் வீட்டுக்கு எதிரில்தான் சிறுமி குடியிருக்கிறார். இதனால் அவர் குறித்த விவரங்கள் ரவிக்குத் தெரியும். கல்லூரி மாணவர் ஒருவர் கொடுத்த தகவலால் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார்.
